×

மாவட்ட மைய நூலகத்தில் பொதுஅறிவு வினாடி வினா போட்டி

 

திருச்சி,மே 27: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் கோடை நூலக முகாம் பள்ளி மாணவர்களுக்காக மே மாதம் முழுவதும் பயனுள்ள வகையில் பல்வேறு நிகழச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைதொடர்ந்து நேற்று சிறார்களின் ஆரோக்கியம் தொடர்பாக இயற்கை மருத்துவர் பீர்த்தி புஷ்கர்ணி கலந்து கொண்டார். குழந்தைகளின் ஆரோக்கியம் அன்றாட வாழ்வில் உணவு முறைகள் பழக்க வழக்கங்கள் தொடர்பாக விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் பெற்றோர்களுடன் கலந்துரையாடி அவர்களது சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்ச்சியினை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வாசக வட்ட துணைத் தலைவர் வல்ல நாடான் இலகணேசன், வாசகர் வட்ட ஆலோசகர் அருணாச்சலம், விஸ்வேஸ்வரன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இன்று பொது அறிவு வினாடி வினா போட்டி நடைப்பெறுகிறது. மேலும் மே.28,29 ஆகிய நாட்களில் சிறுவர்களுக்கான நினைவாற்றல் நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம்.

The post மாவட்ட மைய நூலகத்தில் பொதுஅறிவு வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Tags : General Knowledge Quiz Competition ,District Central Library ,Trichy ,Trichy District Central Library ,Reader's Circle ,Dinakaran ,
× RELATED ₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர்...