×

தேவாரம் பகுதியில் குப்புற கவிழ்ந்த குண்டு மிளகாய் விவசாயம்

தேவாரம், மே 27: தேவாரம் பகுதியில் குண்டு மிளகாய் விவசாயம் குறைந்து உள்ளது. இதனை ஊக்கப்படுத்திட தோட்டக்கலைத் துறை முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம், பண்ணைபுரம், கோம்பை, மலையடிவாரங்களை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் குண்டு மிளகாய் விவசாயம் செய்யப்பட்டது. மிளகாய் குறிப்பிட்ட காலங்களில் பறிக்காதபோது, மிளகாய் வத்தலாக மாறிவிடும்.

இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, குண்டு மிளகாய், விவசாயம் குறைந்துள்ளது. காரணம் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம், குறைந்துபோனதும், கிணறுகளில் தண்ணீர் அதிகம் இல்லாததாலும் குண்டுமிளகாய் விவசாயம் குறைவிற்கு காரணமாகும். மேலும், மிளகாய் வளர்ப்பை, ஊக்குவிக்க வேண்டிய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனால், குண்டு மிளகாய் விவசாயம் செய்த விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக போட்டு உள்ளனர். இதனால் கூலித்தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் விவசாய வருமானமும் குறைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் குண்டு மிளகாய் விவசாயத்தை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post தேவாரம் பகுதியில் குப்புற கவிழ்ந்த குண்டு மிளகாய் விவசாயம் appeared first on Dinakaran.

Tags : Devaram ,Banaipuram ,Gombai ,Hillside ,Dinakaran ,
× RELATED போடி அருகே வெவ்வேறு பகுதியில் 2 இளம்பெண்கள் மாயம்