×

மார்க்சிஸ்ட் பயிற்சி வகுப்பு

 

சிவகங்கை, மே 27: சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. முதல் அமர்விற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணியம்மா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் கிளை, இடைக்கமிட்டி செயல்பாடு என்ற தலைப்பில் பேசினார்.

இரண்டாவது அமர்விற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி தலைமை வகித்தார். கட்சி வரலாறும், எதிர்கால கடமையும் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டக்குழு முடிவுகள் என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர்(பொ) கருப்புச்சாமி ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

The post மார்க்சிஸ்ட் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Communist Party ,District Executive Committee ,Maniamma ,Sridhar ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்