×

நம்புதாளை ஆற்றுப்பகுதியை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல்

 

தொண்டி, மே 27: தொண்டி அருகே நம்புதாளையில் 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் உள்ளது. இந்த படகுகளை நிறுத்த போதிய இடவசதி கடற்கரை பகுதியில் இல்லை. அதனால் பெரும்பாலான படகுகளை ஆற்றுப் பகுதியில் நிறுத்துகின்றனர். மழை காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது, கடற்கரையில் நிறுத்தி இருக்கும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து விடுகிறது.

அதனால் ஆற்றுப்பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தினால் அதிகளவில் படகுகளை நிறுத்தி வைக்கலாம். இதனால் சேதாரத்தையும் தவிர்க்கலாம். இதுகுறித்து நம்புதாளை மீனவர் ஆறுமுகம் கூறியது, மீனவர்களின் நலன் கருதி நம்புதாளை ஆற்றுப்பகுதியை தூர்வார கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம். மழை காலம் என்பதால் படகுகளின் சேதத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post நம்புதாளை ஆற்றுப்பகுதியை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nambudalai river ,Thondi ,Nambuthalai ,Nambuthalai river ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து