×

வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு

 

ஓசூர், மே 27: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யும் குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் பறித்து, அதனை ஓசூர் மலர்சந்தை மற்றும் கர்நாடகவிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் ஓசூர் மலர்சந்தைக்கு தினமும் சுமார் 8 டன் மலர்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்படுகிறது. திருமணம் மற்றும் பண்டிகை சீசன்களில் குண்டுமல்லி மற்றும் சன்னமல்லி அதிகபட்சமாக ஒரு கிலோ ₹2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்.

சீசன் இல்லாத நேரங்களில் அதிகபட்சமாக ₹800க்கு விற்பனை செய்வது வழக்கம். தற்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், குண்டுமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஓசூர் மலர்சந்தைக்கு வரத்து அதிகரித்து குண்டுமல்லி கிலோ ₹250 முதல் ₹300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சன்னமல்லியும் ₹300க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழையால் வரத்து அதிகரிக்கும் என்பதால், குண்டுமல்லியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

The post வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Kundamalli ,Krishnagiri ,Dharmapuri district ,Hosur ,market ,Karnataka ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு 2 பெண்கள் கைது