×

இலங்கை தமிழர் முகாம் பகுதியில் சாக்கடை வடிகாலை தரம் உயர்த்த வேண்டும்

 

கரூர், மே 27: கரூர் இலங்கை தமிழர் முகாம் பகுதியை சுற்றிலும் உள்ள சாக்கடை வடிகாலை தரம் உயர்த்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்படட ராயனூரில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்பை வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில உள்ளது. மேலும், சுற்றுச்சுவரை ஒட்டி சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதஙகளாக வடிகாலின் பல்வேறு பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் செல்லும் நிலையில்தான் உள்ளது.

இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பல முறை புகார் தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இலங்கை தமிழர் முகாம் பகுதியை சுற்றிலும் செல்லும் சாக்கடை வடிகாலை விரைந்து தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளது. துறை அதிகாரிகள் பார்வையிட்டு அனைவரின் நலன் கருதி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

The post இலங்கை தமிழர் முகாம் பகுதியில் சாக்கடை வடிகாலை தரம் உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur ,Lankan Tamil ,Rayanoor ,Karur Corporation ,Tamils ,Dinakaran ,
× RELATED தேக்கமடைவதை கண்டறிந்து பாசன வாக்காலை...