×

தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

 

கடத்தூர், மே 27: கடத்தூரில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயரும் வாய்ப்புள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலகோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், நல்லகுட்ல அள்ளி, கோம்பூர், ஒடசல்பட்டி, மணியம்பாடி, ஆத்தூர், தா.அய்யம்பட்டி, புட்டிரெட்டிப்பட்டி, தாசிரஅள்ளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சூலைகளில் அதிகளவில் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

உற்பத்தி பாதிப்பால் செங்கல் விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் மாரி, ராஜா கூறுகையில், ‘மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல் அறுத்ததை காய வைக்க முடியாமல், தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும், படுகையில் மழைநீர் தேங்கி, வாகனங்களும் உள்ளே செல்ல முடியாததால், விற்பனைக்குத் தயாரான செங்கல்லையும் விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது ஒரு செங்கல் ₹6.60க்கு விற்கப்படும் நிலையில், மழை தொடர்ந்து நீடித்தால் விலை உயர வாய்ப்புள்ளது,’ என்றனர்.

The post தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Dharmapuri district ,Aroor ,Balakodu ,Papriprettipatti ,Pommidi ,Nallakutla Alli ,Gompur ,Odasalpatti ,Maniambadi ,Athur ,Tha ,Ayyambatti ,Putirettipatti ,Dasiraalli ,Dinakaran ,
× RELATED கடத்தூரில் பாமக ஆலோசனை கூட்டம்