×

அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா…உதயகுமார் செம அட்டாக்

கமுதி: அண்ணாமலை ஒரு வெத்து வேட்டு. காலி பெருங்காய டப்பா என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழியில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பாஜ தமிழக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பாராட்டுவதில் சூழ்ச்சி, உள்நோக்கம் உள்ளது. அண்ணாமலையின் உளறல்களை யாரும் பொருட்படுத்தவில்லை.

அவர் சோசியல் மீடியா வைத்திருக்கிறார். அதை வைத்து வைரல் செய்கிறார். அண்ணாமலை ஒரு வெத்து வேட்டு. காலி பெருங்காய டப்பா. அதில் வாசமே இருக்கும். உள்ளே ஒன்றும் இருக்காது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தவரை நற்குணங்கள் இருந்தது. அவர் நியாயவாதியாக இருந்தால் விளக்கம் சொல்லட்டும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்த்து ஓட்டு போடவில்லை என சொல்லட்டும். 11 எம்எல்ஏக்கள் போட்டார்கள் அல்லவா, அதை சொல்லட்டும். ஜெயலலிதா இருந்தவரை கவுரவமாக இருந்தோம். ஓபிஎஸ் பதவி ஆசையால் எல்லோரும் கேவலப்படுகிறோம்’’ என்றார்.

 

The post அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா…உதயகுமார் செம அட்டாக் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Kamudi ,Former minister ,Udayakumar ,Former ,AIADMK ,minister ,Perunazhi ,Ramanathapuram district ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த...