×

முல்லை பெரியாறு அணை விவகாரம் கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: திமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ மறுத்து வரும் கேரள அரசு, தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் பழைய அணையை இடிக்கவும், புதிய அணையை கட்டவும் ஒன்றிய அரசை அணுகி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை முற்றிலும் தடுக்கும் முயற்சியாகும். ‘வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஆபத்து வரும் முன்பே அதைத் தடுத்த நிறுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post முல்லை பெரியாறு அணை விவகாரம் கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : OPS ,Kerala government ,Mullai Periyar dam ,Chennai ,DMK Volunteers' Rights Recovery Committee ,Coordinator ,O. Panneer Selvam ,Supreme Court ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...