×

குட்கா விற்ற கடைக்கு சீல்

 

தர்மபுரி, மே 27: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாமியாபுரம் கூட்டுரோடு, மஞ்சவாடி கணவாய், பட்டுகோணம்பட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என 10க்கும் மேற்பட்ட பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் பாப்பிரெட்டிபட்டி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு ₹25 அயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

 

The post குட்கா விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Dharmapuri ,Samiyapuram Junction, Manjavadi pass ,Pattukonambatti ,Paprirettipatti ,Dinakaran ,
× RELATED குட்கா விற்பனை செய்த பேன்சி ஸ்டோருக்கு சீல்