×

அழகிகள் நடனம் நடப்பதாக பேசி பீகாரை அவமதித்து விட்டார் பிரதமர் மோடி: கார்கே குற்றச்சாட்டு

சாசரம்: பீகார் சாசரம் மக்களவை தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது: முகலாயர் ஆட்சி காலத்தில் ஆட்சியை கவிழ்க்க நடந்த அழகிகள் நடனத்தை (முஜ்ரா) எதிர்க்கட்சிகள் செய்வதாக பிரதமர் மோடி இங்கு பேசி உள்ளார். இது பீகாரையும் அதன் மக்களையும் அவமதிக்கும் செயல். ஒரு பிரதமர் இப்படி பேசியிருக்கக் கூடாது. மோடி ஒரு சர்வாதிகாரி.

மீண்டும் 3வது முறையாக அவர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேலையில்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜ மத வெறுப்பை பரப்புகிறது. இவ்வாறு கார்கே பேசினார்.

 

The post அழகிகள் நடனம் நடப்பதாக பேசி பீகாரை அவமதித்து விட்டார் பிரதமர் மோடி: கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Bihar ,Karke ,Congress ,Kharge ,Sasaram Lok Sabha ,Mughal ,Dinakaran ,
× RELATED இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு மோடி...