×

சமத்துவபுரம் அமையும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு: விரைவில் பணிகள் தொடங்குவதாக தகவல்

செங்கம், மே 26: செங்கம் சட்டமன்ற தொகுதி கண்ணகுருக்கை கிராமத்தில் சமத்துவபுரம் அமைக்க இட ஒதுக்கீடு செய்யும் பணிகள் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவபுரம் இதுநாள் வரையில் இல்லை. இந்நிலையில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சமத்துவபுரம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பின்படி செங்கம் சட்டமன்ற தொகுதியில் செங்கம் தாலுகா கண்ணை குறுக்கை கிராமத்தில் தற்போது சிட்கோ, சிப்காட், அமைய உள்ள பகுதிக்கு அருகாமையில் சமத்துவபுரம் கட்டுவதற்கு உண்டான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இட ஆர்ஜிதப் பணிகள் நடைபெற்றது.

அதற்கு உண்டான அரசாணை பிறப்பித்து கட்டுமான பணிகள் தொடங்க உள்ள இடத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமேலழகன் கோவிந்தராஜுலு பொறியாளர் தேவி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் சமத்துவபுரம் கட்டுமான பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சமத்துவபுரம் அமையும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு: விரைவில் பணிகள் தொடங்குவதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Samathuvapuram ,Sengam ,Kannakurukkai ,Sengam Assembly Constituency ,Thiruvannamalai District ,Assembly Constituency ,
× RELATED ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில்...