×

அனுமதியின்றி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்

 

போடி, மே 26: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் சென்றபோது, சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சின்னகாளிமுத்து மகன் கண்மணி பாரதி (29) அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அனுமதியின்றி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Taluka police station ,SI Manikandan ,Shankarapuram ,Bodi, Theni district ,Tasmac ,Shankarapuram East Street ,Dinakaran ,
× RELATED புகையிலை விற்ற 3 பேர் கைது