×

நாமக்கல்லில் ரத்ததான முகாம்

 

நாமக்கல், மே 26: நாமக்கல் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்புடன் வனத்துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட வன அலுவலர் கலாநிதி தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். முகாமில், வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முன்வந்து ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கிய அலுவலர்களுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள் மொழி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

The post நாமக்கல்லில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Forest Department ,Red Cross ,Namakkal Government Medical College Hospital ,District ,Forest Officer ,Kalanithi ,Namakkallil ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில்...