×

மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

 

தர்மபுரி, மே 26: தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய பயிராக உள்ளது. நெல் 1500 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 2841 ஹெக்டேர், மஞ்சள் 5 ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், கோடை மழை ஓரிரு நாட்கள் மட்டுமே பெய்துள்ளது. இதனால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதற்காக கோடை உழவும் செய்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையை நம்பி 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, சோலை கொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை ஆகிய பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். இது பற்றி விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை மழை 50 சதவீதமே பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையை நம்பி மஞ்சள் பயிரிட்டு வருகிறோம்,’ என்றனர்.

The post மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு