×

ஜி.ஹெச்சில் சிகிச்சை பெற்ற தொழிலாளி மாயம்

 

தர்மபுரி, மே 26: தர்மபுரி மாவட்டம், கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சிவகாமி மற்றும் அவரது உறவினர்கள், நேற்று எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்த எனது கணவர் பெருமாள்(42) கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி மாலை 5 மணி அளவில், தர்மபுரியில் இருந்து அரூர் சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஜடையம்பட்டி பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த நாங்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று பார்த்த போது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை என தெரியவந்தது. எனவே, மாயமான எனது கணவரை, கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

The post ஜி.ஹெச்சில் சிகிச்சை பெற்ற தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,G.H. Dharmapuri ,Perumal ,Sivakami ,Kilimorapur ,Dharmapuri district ,Arur ,Dinakaran ,
× RELATED தளி அருகே மூதாட்டி மாயம்