×

சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு

 

கடலூர், மே 26: சென்னையில் இருந்து இளம்பெண் காரில் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்து 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கார் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் நேற்று கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் மார்க்கமாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூரில் அந்த இளம் பெண் தனது தாய் மாமனுடன் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனையை முடித்து கொண்டனர். போலீசாரின் இந்த திடீர் சோதனையால் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cuddalore ,Cuddalore district ,Chennai's Velachery ,
× RELATED ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று...