×

குஜராத்தில் பயங்கர தீ; 24 பேர் பலி

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி விளையாட்டு மண்டலத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. தீ இதர பகுதிகளுக்கும் பரவியது.

இதில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும், தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையின் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ராஜ்கோட் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் பட்டேல் தெரிவித்தார். இந்த சம்பவத்தையடுத்து டிஆர்பி விளையாட்டு மண்டலத்தின் உரிமையாளர் யுவ்ராஜ் சிங் சோலங்கி கைது செய்யப்பட்டார்.

The post குஜராத்தில் பயங்கர தீ; 24 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Rajkot ,TRP Sports Zone ,Rajkot, Gujarat ,Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு...