×

4 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை; திருப்பதியில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு: இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு

திருமலை: திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து 4 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இவர்கள் 30 மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையுடன் நேற்று வார விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வந்தபடி உள்ளது.இதனால் 4 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

பக்தர்களின் நலன் கருதி ஆக்டோபஸ் சந்திப்பு முதல் கிருஷ்ண தேஜா சந்திப்பு வரை தேவஸ்தானம் சார்பில் குடிநீர் விநியோக நிலையங்களையும், 4 அன்னபிரசாத விநியோக மையம் அமைத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் அலிபிரி மற்றும் வாரி மெட்டு நடைபாதைகளில் மட்டும் சுமார் 2.60 லட்சம் பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு வேண்டுதலின்படி ஏழுமலையானை வழிபாடு செய்தனர்.

நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, 46,486 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களை அழைத்து செல்ல செல்ல இலவச பஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

The post 4 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை; திருப்பதியில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு: இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Swami ,Tirupati Eyumalayan ,darshan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை...