×

அமைந்தகரையில் பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர்களுக்கு வலை

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் பள்ளி, கல்லூரி விடும் நேரங்களில் மாநகர பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படும். இந்நேரத்தில் பஸ்சின் படிக்கட்டில்  நின்றபடி, பக்கவாட்டு கம்பியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அவர்களை உள்ளே வரும்படி கண்டக்டர் கூறினாலும், பஸ்சுக்குள் நிற்பதற்கு இடமில்லையே… நாங்கள் எப்படி உள்ளே வருவது என்று கூறுவதால் வாய்த்தகராறு ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில், நேற்று மாலை கோயம்பேட்டில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். அவர்களை உள்ளே வரும்படி டிரைவர் வலியுறுத்தினார். அவர்கள் வர மறுத்ததோடு, கேலி செய்துள்ளனர். இதனால் பேருந்தை நிறுத்திவிட்டு, ‘நீங்கள் உள்ளே சென்றால்தான் பஸ்சை எடுப்பேன்’ என டிரைவர் எச்சரித்தார். இதனால் மாணவர்களுக்கும் டிரைவர், கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், மாநகர பேருந்தின் பின்பக்க பெயர்பலகை கண்ணாடியை கற்களால் அடித்து உடைத்து விட்டு தப்பினர். இதுகுறித்து அமைந்தகரை போலீசில் டிரைவர் தேவராஜ் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….

The post அமைந்தகரையில் பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Chennai Nitakarai ,Arumbakkam ,Koyambedu ,
× RELATED அரும்பாக்கத்தில் பஸ்சுக்கு...