×

யூடியூபர் சங்கர் மீதான கைது நடவடிக்கை தவறில்லை டிடிவி தினகரன் பேட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, மே 25: யூடியூபர் சங்கர் மீதான கைது நடவடிக்கை தவறில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: தேனி மக்களவைத் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள். யூடியூபர் சங்கர் பேசியது மிகவும் தவறானது. முதல்வர், அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவர் பேசியது எல்லோரையும் வருத்தம் அடையச் செய்திருக்கிறது. எனவே, யூடியூபர் சங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள கைது நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. தமிழக அரசு சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post யூடியூபர் சங்கர் மீதான கைது நடவடிக்கை தவறில்லை டிடிவி தினகரன் பேட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,Annamalaiyar temple ,Thiruvannamalai ,AAMUK ,general secretary ,TTV ,YouTuber ,Shankar ,Dhinakaran Swamy ,Dinakaran ,
× RELATED மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்