×

விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் ஆங்கில பேச்சு போட்டியில் மாணவிகள் சாதனை

விருதுநகர், மே 25: விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவற்கான ஆங்கில பேச்சு போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக புகழேந்தி பாண்டியன் கலந்து கொண்டார். முதல் பரிசினை முதலாமாண்டு மாணவி தரணிபிரியா, இரண்டாம் பரிசை மாணவி இதயநிலா, மூன்றாம் பரிசை மாணவி மிர்த்திகா பிடித்தனர்.

போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் புகழேந்தி பாண்டியன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீ முருகன், கல்லூரி முதல்வர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் ஆங்கில பேச்சு போட்டியில் மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar Kamaraj College of Engineering ,Virudhunagar ,Kamaraj College of Engineering and Technology ,Pujahendi Pandian ,Dharanibriya ,
× RELATED விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நுண்கலை போட்டி பரிசளிப்பு