×

ராட்சத பைப் லைன் அமைக்கும் பணி தீவிரம்

 

ராசிபுரம், மே 25: ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், ராட்சத பைப்லைன் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராசிபுரம் பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், திமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோரின் தீவிர முயற்சியால், புதிய குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சி மற்றும் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், வெண்ணந்தூர், அத்தனூர்,

பிள்ளாநல்லூர், பட்டணம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, மல்லசமுத்திரம் பேரூராட்சிகளும் பயன்பெறும் விதமாக, புதிதாக ரூ.854.37 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகிறது ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தரை தொட்டிகள், உந்து நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ராசிபுரம் புறவழிச்சாலை, குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதியில் ராட்சத பைப் லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

The post ராட்சத பைப் லைன் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Rasipuram Joint Water ,DMK District ,Rajeshkumar MP ,Minister ,Mathivendan ,
× RELATED ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம்