×

பெரியபாளையம் அருகே ஏரிக்கால்வாய் ஓரம் தடுப்புகள் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, மே 25: பெரியபாளையம் அருகே விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ள ஏரிக்கால்வாய் அருகே தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே காக்கவாக்கம் ஏரியிலிருந்து ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் செல்வதற்காக, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தும்பாக்கம் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் இருபுறமும் கால்வாய் தூர்வாரப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் ஏரிக்கு செல்லும் கால்வாய் சாலை ஓரத்திலேயே இருப்பதால் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே ஏரிக்கால்வாய் ஓரம் தடுப்புகள் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Kakkavakkam lake ,Athuppakkam ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி,...