×

250 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற ஸ்டிரைக்: 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

சாத்தூர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

சரவெடி, பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி சோதனையை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் பகுதிகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். நேற்று மட்டும் ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post 250 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற ஸ்டிரைக்: 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Sivakasi ,Vembakkottai ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED ஆலையில் பயங்கர தீ ரூ.1 கோடி பட்டாசு நாசம்