×

வாடகை தராததால் நிறுவனத்தின் பொருட்களை விற்ற பா.ஜ.க. நிர்வாகி கைது

திருப்பூர்: திருப்பூரில் வாடகை தராததால் நிறுவனத்தில் இருந்த பொருட்களை பூட்டை உடைத்து விற்ற பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க. நிர்வாகி முருகேசனுக்கு சொந்தமான கட்டிடத்தை சுந்தரமூர்த்தி என்பவர் வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். போதிய ஆர்டர்கள் இல்லாததால் சுந்தரமூர்த்தி ஒரு மாதம் வாடகை தரவில்லை. சுந்தரமூர்த்தி வாடகை தராததால் பனியன் நிறுவனத்தில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 30 தையல் இயந்திரங்களை முருகேசன் எடுத்து விற்றுள்ளார். சுந்தரமூர்த்தி புகாரின்பேரில் பா.ஜ.க. ஐ.டி. பிரிவு நிர்வாகி முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

The post வாடகை தராததால் நிறுவனத்தின் பொருட்களை விற்ற பா.ஜ.க. நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Tirupur ,Sundaramurthy ,Banyan Company ,Dinakaran ,
× RELATED சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாய...