×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மின்னொளியில் ஜொலிக்கும் கருட கம்பம் 16 கால் மண்டபம்: பக்தர்கள் மகிழ்ச்சி

மன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத்தலமான ராஜகோபால சுவாமி கோயில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்னகத்து தட்சிண துவாரகை என அழைக்கப்படும் இக் கோயிலில் பெருமாள் ருக்மணி, சத்திய பாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்திலும், படி தாண்டா பத்தினி என அழைக்கப்படும் செங்க மலத்தாயார் தனி சந்நிதியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் அறங் காவலர் குழு தலைவராக கருடர் இளவரசனும், செயல் அலுவலராக மாதவ னும், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக முத்துமாணிக்கம், மனோகரன், நட ராஜன், லதா வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குட முழுக்கு நடத்தி ஆன்மீக தளத்திலும் மிக சிறந்த அரசாக திகழ்ந்து வருகிறது.அந்த வகையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன் முயற்சி காரணமாக பிரசித்தி பெற்ற மன் னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள நான்கு ராஜகோபு ரங்கள் ரூ.2.87 கோடியில் புதுப்பிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், கோயில் திருமண மண்டபம் ரூ.1. 20 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.

இந்த கோயிலில் 54 ஆண்டுகள் ஆன்மிக சேவை செய்த யானை செங்க மலத்திற்கு தாயார் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் ரூ.49 லட்சத்தில் நினைவு மண்டபம், தற்போது கோயிலில் உள்ள செங்கமலம் யானைக்கு ஈசானிய மூலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் நீச்சல்குளம், உற்சவர் உலோகசிலைகளை பாதுகாக்க ரூ.26 லட்சம் மதிப்பில் 2 பாதுகாப்பு பெட்டகங்கள், பக்தர்கள் வசதிக்காக ரூ.3.15 லட்சம் மதிப்பில் கழிவறைகள் புதுப்பித்தல், உபயதாரர் பங்களிப்பில் 2 தேருக்கு ரூ.14. 80 லட்சம் மதிப்பில் இரண்டு பைபர் தேர் கொட்டகை, உபயதாரர் பங்களிப்பில் ராஜகோபுரம் முன்பு சுமார் ரூ.80 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பரிந்துரையின் பேரில் அறங்காவலர்குழு தலைவர் கருடர் இளவரசன் ஏற்பாட்டில் ராஜகோபுரம் முன் புறம் உள்ள கருட கம்பம் 16 கால் மண்டபம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ளது போல் அலங்கார மின் விளக்கு கள் பொருத்தப்பட்டு தற்போது பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கருட கம்பம் 16 கால் மண்டபம் இரவு நேரங்களில் மின் னொளியில் மின்னுவது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மின்னொளியில் ஜொலிக்கும் கருட கம்பம் 16 கால் மண்டபம்: பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Rajagopala Swamy ,Temple ,Garuda ,Gampam ,Rajagopala ,Swamy ,Southern Dakshina Dwarka ,Perumal Rukmani ,Sathya Bama ,Samedar ,Kannan Thirukolam ,Mannargudi Rajagopala Swamy Temple ,
× RELATED வடுவூர் அருகே தனியார் நிதி நிறுவன பெண்...