×

வெங்காயம் பதப்படுத்துதலை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: கதிரியக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஆண்டு 1 லட்சம் டன் அளவில் வெங்காய பதப்படுத்துதலை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெங்காய பதப்படுத்துதலை அதிகரிப்பதன் மூலம் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை தடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்; 2023-24ல் நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தி 16% குறைய வாய்ப்பு உள்ளது. சோனிபட், தானே, நாசிக், மும்பையில் கதிரியக்க மையம் அமைக்க வசதி உள்ளதா என ஆராய ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் தடை நீக்கப்பட்ட பின், இம்மாத தொடக்கத்தில் இருந்து 45,000 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

The post வெங்காயம் பதப்படுத்துதலை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Dinakaran ,
× RELATED சில்லறை பணவீக்க விகிதம் 4.75%ஆக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்