×

தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் குடிநீர்

தஞ்சாவூர், மே 24: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வெளியேறி குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனை உனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதி உள்ளது. இந்த வழித்தடத்தில் பூமிக்கு அடியில் குழாய் முலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஆர்.ஆர். நகர் பகுதியில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் தேங்கி நிற்கிறது. இவ்வாறு குடிநீர் வெளியேறி வீணாவதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் கூடும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் ,இதுவரை குடிநீர் வீணாவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கவனித்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,R.R. ,Thanjavur RR ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே...