×

பெலிக்சிடம் போலீஸ் காவலில் விசாரணை

கோவை: பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார். அவரது பதிவை வெளியிட்ட யூ டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டையும் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவரை காவலில் விசாரிக்க கோவை ஜே.எம்.எண் 4 கோர்ட்டில் போலீசார் மனு செய்திருந்தனர். இதற்காக திருச்சி சிறையில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று அழைத்து வந்து, நீதிபதி சரவணபாபு முன் ஆஜர்படுத்தினர்.

அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று மாலையிலிருந்து பெலிக்ஸ் ஜெரால்டிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கஞ்சா பறிமுதல் வழக்கில் கைதான யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன், வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

The post பெலிக்சிடம் போலீஸ் காவலில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Felix ,YouTuber ,Shankar ,Coe ,YouTube ,Gerald ,Gov. ,J. M. ,
× RELATED யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்