×

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு

 

சேலம், மே 24: சேலத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணி நடந்தது. சேலம் நகர்புறம், ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ், சேலம் பச்சப்பட்டி சுற்றுவட்டாரத்தில், கல்லாதோர் கணக்கெடுப்பு பணி, வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர் தலைமையில் நேற்று நடந்தது. சேலம் நகர்ப்புற ஒன்றிய பகுதிகளில், கடந்த 2ம் தேதி தொடங்கிய இப்பணி இன்று (24ம் தேதி) நிறைவு பெறுகிறது.

இதில் முற்றிலும் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோரை பற்றி விவரங்கள் வீடு வாரியாக சென்று கணக்கெடுக்கப்படவுள்ளது. சேலம் நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், செல்வி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா, ஆசிரியர் பயிற்றுநர் விஜி, பள்ளி மேலாண்மை குழு, தன்னார்வலர் ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் இணைந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Kallador ,Salem Pachapatti ,Dinakaran ,
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...