×

பிளாஸ்டிக் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்

 

திருப்பூர், மே 24: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட கலைஞர் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநகர நல அதிகாரி (பொறுப்பு) கலைச்செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

15 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த கடைகளுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பின்னரும், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

The post பிளாஸ்டிக் விற்ற 15 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Corporation ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED நெருப்பெரிச்சல் பகுதியில் விபத்தில்...