×

ஆழ்கடல் மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமம் தேர்வு

 

ராமேஸ்வரம், மே 24: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம் பயிற்சியை மீனவர்களுக்கு வழங்கி வருகிறது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட 15 மீனவர்களுக்கு முதற்கட்டமாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.

மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, சிவகுமார் மற்றும் மீன்வள ஆய்வாளர்கள் ஆகியோர் தேர்வினை நடத்தினர். பாக்ஜலசந்தி கடலில் மீனவர்கள் விசைப்படகை ஓட்டி காட்டினர். மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் பொறியாளர் சிவசுடலைமணி ஆகியோர் தேர்வினை ஆய்வு செய்தனர்.

The post ஆழ்கடல் மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Deep Sea Fishing ,Rameswaram ,Tamil Nadu ,Dr. ,J. ,Jayalalithaa Fisheries University ,Directorate ,Vocational Training ,Tamil Nadu Skill Development Corporation ,Dinakaran ,
× RELATED வைகாசி அமாவாசையை முன்னிட்டு...