×

சித்திரைச்சாவடி தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

 

கோவை, மே 24: கோவை மாவட்டத்தில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. நகர் மற்றும் ஊரக பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் குட்டைகள், குளங்கள், நீரோடைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பு அணைக்கு நேற்று புது வெள்ளம் வந்தது.

சிலர் ஆர்வத்துடன் தண்ணீரை பார்த்த நிலையில், குளிக்கவும் செய்கின்றனர். மேலும், இந்த தடுப்பணை கோடை வெயிலின் காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் வறண்டு கிடந்தது. தற்போது, பெய்து வரும் கோடை மழையினால் தடுப்பு அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்போது சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

The post சித்திரைச்சாவடி தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chitraichavadi barrage ,Coimbatore ,Coimbatore district ,Western Ghats ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!