×

ஹெல்மெட் அணிந்து வந்து தனியாக செல்லும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு: தனியார் நிறுவன ஊழியர் கைது

 

சென்னை, மே 24: மதுரவாயல் லட்சுமி நகர் இந்திரா காந்தி குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராணி (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 4ம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மகள் கோயம்பேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி மாலை 7 மணிக்கு வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு எனது மகள் சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், எனது மகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்துவிட்டு, தப்பியுள்ளார்.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மதுரவாயல் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த இந்து (39, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 15ம் தேதி தனது 12ம் வகுப்பு படிக்கும் மகள் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் ேபாது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், தனது மகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்து விட்டு தப்பியதாக புகார் அளித்தார்.

இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் பைக் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அயப்பன்தாங்கல் அண்ணாநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த மகேஷ் (21) என்பவர், தனியாக செல்லும் பள்ளி மாணவிகளை குறிவைத்து ஹெல்மெட் அணிந்து பாலியல் தொந்தரவு செய்த வந்தது தெரியவந்தது. மேலும், மகேஷ் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மகேஷ் மீது போக்சோ சட்டத்தில் கைது ெசய்தனர்.

The post ஹெல்மெட் அணிந்து வந்து தனியாக செல்லும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு: தனியார் நிறுவன ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maduravayal Lakshmi Nagar Indira Gandhi Cross Street ,Virugampakkam All Women Police Station ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...