×

அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு

மதுரை: மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த திவாரி, தற்போது திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி அங்கித் திவாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையை வாரம் ஒருமுறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என மாற்றி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ankit Tiwari ,Dindigul ,Tiwari ,Dindigul court ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் நிபந்தனை தளர்வு!!