×

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வருக்கு நேற்று எழுதிய கடிதம்: காவிரி படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பணியை நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்த வேண்டும். இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்த பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

The post சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,M.U. K. Stalin ,Kerala government ,Amravati ,Kaviri basin ,Amravati River ,PM ,
× RELATED சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை...