×

அதானி, அதிமுக 6000 கோடி நிலக்கரி ஊழல் மோடியின் நடவடிக்கை என்ன? விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கேள்வி

சென்னை: அதானியும், அதிமுகவும் ரூ.6000 கோடி நிலக்கரி ஊழல் தொடர்பாக பிரதமர் மோடியின் நடவடிக்கை என்ன என்று விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்தோனேஷியா நாட்டில் நிலக்கரியை டன் ஒன்றுக்கு ரூ.2,300 அளவிற்கு மட்டமான தரம் கொண்ட நிலக்கரியை அதானி குழுமம் வாங்கி அதனை 7650 ரூபாய்க்கு தமிழ்நாட்டு மின்சார வாரியத்திற்கு விற்றுள்ளது. இதன் மூலம் ரூ.6000 கோடிக்கு அதிகமாக ஊழல் நடைபெற்றுள்ளது.

இதில் அதானி குழுமத்திற்கும் அதிமுக ஆட்சியாளருக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது என்பதை இங்கிலாந்து நாட்டு ஏடு ஆதாரப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வைப்பதன் மூலம் மோடி ஊழலுக்கு எதிரானவர் என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

The post அதானி, அதிமுக 6000 கோடி நிலக்கரி ஊழல் மோடியின் நடவடிக்கை என்ன? விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Adani ,Modi ,Party ,CHENNAI ,Farmers-Workers Party ,AIADMK ,Adani Group ,Indonesia ,Dinakaran ,
× RELATED தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில்...