×

தமிழினத்தை அவமதித்த பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை எனும் பெயரில் நாளொரு வெறுப்பும் பொழுதொரு விஷமும் விதைத்து வருகிறார். உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார். இதற்காகப் பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையெனில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஒரு தமிழர் தான். தேர்தலில் மோடி தோற்றால் அதற்கும் தமிழர்கள் மீது பழி சுமத்தினால் ஆச்சரியமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழினத்தை அவமதித்த பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Jawahirullah ,CHENNAI ,Humanist People's Party ,President ,Modi ,
× RELATED குவைத் தீ விபத்தில்...