×

முத்தரையர் 1349வது சதயவிழா: எல்.முருகன் வாழ்த்து

சென்னை: முத்தரையரின் 1349வது சதயவிழாவில் அய்யாவை போற்றி வணங்குகிறேன் என்று எல்.முருகன் கூறியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாமன்னர்களை கொண்ட படைகளை எதிர்த்து 12 முறைக்கு மேல் போர் கண்ட பேரரசர், அய்யா பெரும்பிடுகு முத்தரையர்களின் 1349வது சதயவிழா நாளான இன்று (நேற்று) அய்யாவை போற்றி வணங்குகிறேன்.

வீரம் விளைந்த மண்ணாம் உலகின் மூத்த குடியான தமிழர் மரபின் நலன் காக்கவும், தமிழ் மொழியின் பெருமைக்கும் முத்திரையாய் திகழ்ந்த, அய்யா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை, நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம். அய்யாவின் 1349வது சதயதினம் கொண்டாடுவதில் பெருமகிழ்வடைவோம்.

The post முத்தரையர் 1349வது சதயவிழா: எல்.முருகன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Muttaraiyar ,1349th Satayavija ,L. Murugan ,CHENNAI ,Ayya ,Mutharaiyar ,Union Minister of State ,
× RELATED குவைத் தீவிபத்து: உயிரிழந்தவர்களின்...