×

ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.880 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.54,880க்கு விற்கப்பட்டது.  நேற்று தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட அதிக விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது விசேஷத்திற்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Savaran ,Sawaran ,Dinakaran ,
× RELATED தங்கம் விலை அதிரடி; ஒரே நாளில்...