×

சென்னை வந்தால் வேட்டி கட்டி வரக் கூடாது; தமிழர்களை திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார் மோடி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று அளித்த பேட்டி: தரமற்ற நிலக்கரியை தமிழ்நாட்டுக்கு அதானி மூலம் கொடுத்து ரூ. 6 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார் பிரதமர் மோடி. தமிழர்களை திருடர்கள் என்ற தொனியில் மோடி பேசி இருக்கிறார். பிரதமர் மோடி தப்பித் தவறி சென்னை வந்தால் வேட்டி கட்டிக் கொண்டு வரக் கூடாது.

தமிழர்களை மோடி விமர்சித்ததால் நான் அவரை மனிதனாகக் கூட எண்ணவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை இடிப்பார்கள் என்று மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். கோயிலை இடிக்கும் எண்ணம் எப்போதும் காங்கிரசுக்கு இல்லை என்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, என்.ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post சென்னை வந்தால் வேட்டி கட்டி வரக் கூடாது; தமிழர்களை திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார் மோடி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Modi ,EVKS Elangovan ,Former ,Tamil Nadu Congress ,president ,Satyamurthy Bhavan ,Adani ,
× RELATED கூட்டணியில் இருந்ததால்தான்...