- நக்சலைட்டுகள்
- நாராயணன்பூர்
- சத்தீஸ்கர்
- நாராயண்பூர்-பிஜாப்பூர்
- தண்டேவாடா
- பாஸ்டர் மாவட்ட ரிசர்வ் போலீஸ்
- தின மலர்
நாராயண்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் நாராயன்பூர் -பிஜபூரில் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து தண்டேவாடா, நாராயன்பூர் மற்றும் பாஸ்டர் மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
அவர்களுக்கு போலீசார் கொடுத்த பதிலடியில் 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டில் இதுவரை 112 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சல்கள் தேடுதல் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post 7 நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.