×

பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரஜ்வல்லின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2வது முறையாக கடிதம்

பெங்களூரு: பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் சித்தராமையா 2வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் ஹொலெநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகிய இருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீசும் வெளியிட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவிற்கு அழைத்துவர எஸ்.ஐ.டி தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஐ.டி வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. பிரஜ்வலின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் சித்தராமையாவும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு முதல்வர் சித்தராமையா பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

The post பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரஜ்வல்லின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2வது முறையாக கடிதம் appeared first on Dinakaran.

Tags : Prajwal ,Karnataka ,Chief Minister Siddaramaiah ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Modi ,Prajwal Revanna ,Karnataka State Hassan Constituency ,Majda ,Brajwal ,
× RELATED பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வலை...