×

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 4 பேர் பலி

மும்பை: மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவாலி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலையில் இன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது. பாய்லர் வெடித்த சத்தம் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு கேட்டு கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் தொழிற்சாலைக்கு அருகே இருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கார் ஷோரூம் உள்பட 2 கட்டிடங்களுக்கு பரவியுள்ளது. பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் 8 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

25 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Thane, Marathya ,Dombivali ,Thane, Marathia state ,Maharashtra ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு