×

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேர் சீரியஸ்

பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோயில் உள்ளது. இங்கு வருடாந்திர உற்சவ திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 51 பேர் உடனடியாக அருகில் உள்ள சாவதட்டி மருத்துவமனை மற்றும் பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்கள் தார்வாட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹூலிகட்டி கிராமத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கிராம மக்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

The post கோயில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Belagavi ,Baireswar Karimma Devi ,Hoolikatty ,Belagavi district, Karnataka ,Utsava ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை