×

டெம்போவில் தொழிலாளர்களுடன் ராகுல் உரையாடல்


சண்டிகர்: சமீபத்தில், அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியதாக பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியது மோடிக்கு எப்படி தெரியும்? முன் அனுபவம் உண்டா? அப்படி காங்கிரஸ் வாங்கியது என்றால் அமலாக்க துறை, சிபிஐயை விசாரணைக்கு அனுப்புங்கள்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரியானாவில் பிரசாரத்துக்கு இடையே ராகுல் காந்தி டெம்போவின் பின்புறம் நின்றபடி பயணித்து கொண்டே தொழிலாளர்களிடம் உரையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ், “மோடியின் டெம்போ நியாயமற்றது, ஆனால் காங்கிரஸ் டெம்போ நியாயமானது” என தெரிவித்துள்ளது. முன்னதாக அரியா னாவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பேசியபோது, ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை கிழித்து எறிவோம்’ என்றார்.

The post டெம்போவில் தொழிலாளர்களுடன் ராகுல் உரையாடல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,TEMPO ,Chandigarh ,Modi ,Congress ,Adani ,Ambani ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்...