×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த பின்ட் என்பவரின் 2 வயது குழந்தை கடத்தப்பட்டதாக ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து உடனடியாக சிசிடிவி பதிவுகளைக் கொண்டு, குழந்தையை கடத்திச் சென்ற 2 பேரை போலீஸ் பிடித்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த துர்கா (29) மற்றும் சித்தராமையா (18) என்பவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் குழந்தையை மீட்டு ஆந்திர தம்பதியிடம் போலீஸ் குழந்தையை ஒப்படைத்தது.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Central railway station ,Chennai ,Chennai Central railway station ,Bihar ,Railway Police ,Dinakaran ,
× RELATED சென்னையில் அல்லி குளம் தபால்...