×

ஊட்டி மலை ரயில் ரத்து


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு 184 பயணிகளுடன் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது தெரியவந்தது.

இதை அடுத்து மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாகவும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தண்டவாளத்தில் விழுந்த மண் மற்றும் ராட்சத பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post ஊட்டி மலை ரயில் ரத்து appeared first on Dinakaran.

Tags : Ooty Hill ,Mettupalayam ,Ooty ,Mettupalayam, Coimbatore ,Nilgiri district ,Adderley ,Hillgrove ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இருந்து நேரடியாக ஊட்டிக்கு மாற்றுப்பாதை!!