×

பஸ் கவிழ்ந்து 2 சிறுமிகள் பலி


திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அதோனிக்கு தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கர்னூல் மாவட்டம், கொடுமூர் அருகே இன்று அதிகாலை பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் ஒரு வாகனம் சென்றது. இந்த வாகனத்தை முந்திச்செல்ல பஸ் டிரைவர் முயன்றார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமி (13), கோவர்த்தினி (8) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் பகாயமடைந்த 40 பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பஸ் கவிழ்ந்து 2 சிறுமிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Hyderabad ,Telangana ,Adoni ,Kurnool district ,Andhra ,Kodumur ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...